பாகிஸ்தான் பொதுத் தேர்தல் வெளிப்படையாக முறைகேடின்றி நடப்பதற்குச் சாத்தியல்லை என்று அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க செனட் அயலுறவுக் குழுக் கூட்டத்தில் பேசிய அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், "பாகிஸ்தான் பொதுத் தேர்தல் அமைதியாக முறைகேடின்றி நடப்பதற்கு வாய்ப்பில்லை. தேர்தல் சமயத்தில் வன்முறையைத் தூண்டுவதற்குக் காத்திருக்கும் எல்லாச் சக்திகள் குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.
தேர்தலை முறைகேடின்றி நடத்தி முடிப்பதின் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்பதை பாகிஸ்தான் தலைமை உணர்ந்திருக்கும் என்று நம்புகிறேன், அது ஜனநாயகத்தை நோக்கிய முன்னேற்றமாகும்.
ஒருமுறை தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டால், அதன் பிறகு அங்கு அமையவுள்ள அரசு மக்களின் அரசாகவும், ஜனநாயகத்தை நிலைநாட்டக் கூடிய அரசாகவும் செயல்பட வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து நிர்ப்பந்திக்கும்" என்றார்.