சிறிலங்காவில் ராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு உள்ளன.
மணலாற்றுப் பகுதியில் உள்ள புலிகளின் நிலைகளின் மீது நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி முதல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தத் துவங்கினர். மண்கிண்டி மலைப் பகுதியில் மறைந்திருந்த ராணுவத்தினரின் மீது புலிகளும் கடுமையாக எதிர்த் தாக்குதல் நடத்தினர்.
ஆர்ட்டிலெறி, இயந்திரத் துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முன்னேறுவதற்கு முயன்ற சிறிலங்க ராணுவத்தினரின் முயற்சிகள் அனைத்தும் புலிகளால் முறியடிக்கப்பட்டன.
பிற்பகல் 4 மணி வரை நீடித்த இந்த மோதலில் படையினருக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டன. இறுதியில் ராணுவத்தினர் தங்களின் நிலைகளுக்குப் பின்வாங்கினர்.