இலங்கைத் தலைநகர் கொழும்புவில் சிறிலங்கா ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இளம்பெண்கள் உட்பட 198 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக வெளியேறிய பிறகு, ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக சந்தேகத்தின் பேரில் தமிழர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தலைநகர் கொழும்பில் காவல்துறையுடன் இணைந்து ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சந்தேகத்தின் பேரில் தமிழர்கள் 198 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், பம்பலப்பட்டி, கொல்பிட்டி சோதனைச் சாவடிகளில் ஏராளமான வாகனங்கள் சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.