கடந்த 2007ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணத்தில் இயற்கையான காரணங்களால் 221 இந்தியர்களும், சாலை விபத்துகளால் 6 இந்தியர்களும் பலியாகியுள்ளனர்.
இதுதவிர 81 இந்தியர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் இருந்து ஹஜ் குழு மூலமாக 1.1 லட்சம் பேரும், மற்ற பயண முகவர்களின் மூலமாக 50 ஆயிரம் பேரும் ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.
இதில் பெரும்பாலானவர்கள் நாடு திரும்பிவிட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை இந்தியத் தூதரக அதிகாரிகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு 778 சாலை விபத்துகள் நடந்ததாகவும், இவற்றில் சிக்கியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என மொத்தம் 11,700 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் சவுதி அரசு கூறியுள்ளது.
இதில் 800 பேரைத் தவிர மற்ற அனைவரும் வீடு திரும்பிவிட்டனர்.
பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இந்தோனேசியர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். மெக்கா, மதினா நகரங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மட்டும் 217 பேர் பலியாகியுள்ளனர் என்று இந்தோனேசிய தூதரகம் கூறியுள்ளது.