பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் ஆதரவாளர்களின் மீது மர்ம ஆள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ராவல்பிண்டி அருகில் இன்று மாலை நடக்கவிருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தொண்டர்கள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் குறித்துத் தகவலறிந்தவுடன் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த நவாஸ் ஷெரீஃப், கடும் கண்டனம் தெரிவித்ததுடன் முஷாரஃப்பின் ஆட்சியில் தங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை என்றார்.