தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்க ராணுவம் பெற்றுவரும் வெற்றிகள் இலங்கை இனப் பிரச்சனைக்கு ராணுவ ரீதியிலான தீர்வுக்கு வழி வகுக்கிறது என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.
தென் இலங்கையில் மத்தாரா என்ற இடத்தில் சுனாமி பேரழிவு நினைவு தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராஜபக்சே, “இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணவே நாம் விரும்பினாலும், பயங்கரவாத்த்தை முறியடிக்காமல் அது குறித்துப் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை” என்று கூறினார்.
“சுனாமி பேரழிவை எதிர்கொண்டு சமாளித்தைப்பொல பயங்கரவாதத்தையும் எதிர்கொண்டு முறியடிப்போம். புலிகளுக்கு எதிராக இதுவரை பெறாத வெற்றிகளைப் பெற்றுள்ளோம். இதன்மூலம் இனப்பிரச்சனைக்கு ராணுவ ரீதியிலான தீர்வு காணும் வழி பிறந்துள்ளது. இதில் சந்தேகத்திற்கு இடமில்லை” என்று மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார்.