அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வீசிவரும் கடுமையான பனிப்புயலுக்கு இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சோக நிகழ்ச்சிகளாக உருமாறியுள்ளன.
கனடா நாட்டின் எல்லையில் மையம் கொண்டுள்ள பனிப்புயல் டெக்சாஸ் மாகாணத்தை உலுக்கிவருகிறது. இதுவரை மின்னசோட்டா நெடுஞ்சாலையில் மட்டும் 300 க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் ஏற்படுள்ளன.
பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் தூக்கி எறியப்பட்டதால் மின்சாரம் தடைபட்டு இருள் கவ்விக் கிடக்கிறது.
நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வீசிவரும் இந்த பனிப்புயல், அமெரிக்க மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.
இன்னும் ஒருவார காலத்திற்கு இந்த பனிப்புயல் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.