வடமேற்குப் பாகிஸ்தானில் உள்ள ராணுவ முகாமின் மீது தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 2 ராணுவத்தினர் உள்பட 5 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர்.
நெளசரா கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ முகாமின் நுழைவாயிலின் மீது சைக்கிளில் வந்த பயங்கரவாதி தன்னிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான்.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை விவரம் உடனடியாகத் தெரியவில்லை. இருந்தாலும், அதில் பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று கருதப்படுகிறது.
பாகிஸ்தானில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள அவசர நிலை இன்று ரத்து செய்யப்பட உள்ள நிலையில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நேற்று குவட்டா நகர் ராணுவச் சோதனைச் சாவடியில் இதேபோலத் தாக்குதல் நடத்தப்பட்டதும், அதில் 5 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.