பாகிஸ்தானில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக வருகை தர உள்ள சர்வதேசப் பார்வையாளர்களுக்கு விசா வழங்க அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பாகிஸ்தானில் வருகிற ஜனவரி 8 ஆம் தேதி பொது தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தல் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக சர்வதேசப் பார்வையாளர்கள் வரலாம் என்று அதிபர் பர்வேஷ் முஷாரஃப் அழைப்பு விடுத்திருந்தார். இதனடிப்படையில் பொதுத் தேர்தலைகளைப் பார்வையிடுவதற்காக அமெரிக்கா அமைத்துள்ள சர்வதேச குடியரசுகள் நிறுவனத்தின் குழுவினர் பாகிஸ்தான் வருகின்றனர்.
அவர்களுக்கு உரிய விசாக்களை வழங்க அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. முதல் கட்டமாக அடுத்த வாரம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 65 பேர் கொண்ட குழு பாகிஸ்தானுக்கு வர உள்ளது.