இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இருதரப்பு நலனுக்கும் மிகவும் முக்கியமானது என்பதால் அதைச் செயல்படுத்துவதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டானா பெரினோ, "அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்தும் விடயத்தில் நாங்கள் மிகவும் முனைப்புடன் உள்ளோம். இந்தியாவில் உருவாகியுள்ள எதிர்ப்புகளைச் சமாளித்து அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக அங்குள்ள அரசுடன் அமெரிக்க அயலுறவு இணையமைச்சர் நிகோலஸ் பர்ன்ஸ் பேசி வருகிறார்" என்றார்.
"இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இருநாட்டு நலன்களுக்கும் மிகவும் முக்கியமானது" என்று மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் கூறினார் டானா.