''தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கும் எண்ணம் சிறிலங்கா அரசுக்கு இல்லை'' என்று அந்நாட்டு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தம்மைக் கொல்ல சதி நடப்பதாக தெரிவித்தது குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர், சிவாஜிலிங்கத்தைக் கொலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அவரது வீட்டுக்குள்தான் குண்டை வீசுவார்கள். வீட்டுக்கு வெளியே போட்டுவிட்டுச் செல்ல மாட்டார்கள் என்றார்.
மேலும், விமானப்படை, கடற்படைத் தளபதிகளும் பாதுகாப்புப் படையின் உயரதிகாரிகளும் வசிக்கின்ற பகுதியில்தான் சிவாஜிலிங்கம் வசிக்கிறார் என்றும் ஜெயராஜ் கூறினார்.