ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று நேட்டோ படையினரின் மீது தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் 10 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கன் அதிபர் ஹமீது கர்சாயை சந்திப்பதற்காக அமெரிக்க பாதுகாப்பு செயலர் ராபர்ட் கேட்ஸ் தலைமையிலான நேட்டோ அதிகாரிகள் சென்று கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் நேட்டோ படையினர் தரப்பில் யாருக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை. தற்கொலைப் படை பயங்கரவாதி பயன்படுத்திய கார் முற்றிலுமாக உருக்குலைந்தது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஆப்கன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.