Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஊனமுற்ற குழந்தைகள் மீது பாலியல் தொழிலாளியின் பரிவு!

ஊனமுற்ற குழந்தைகள் மீது பாலியல் தொழிலாளியின் பரிவு!

Webdunia

, வெள்ளி, 30 நவம்பர் 2007 (17:14 IST)
சிலி நாட்டைச் சேர்ந்த பெண் பாலியல் தொழிலாளர் ஒருவர் ஊனமுற்ற குழந்தைகளின் வாழ்வுக்கு திரட்டப்படும் நிதிக்காக 27 மணிநேரம் தனது தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானத்தை தர முடிவு செய்துள்ளார். இதற்கான பொது ஏலமும் நடைப்பெற்றுள்ளது.

தென் அமெரிக்க நாடான சிலி கத்தோலிக்க மதத்தை கடைபிடித்து வருகிறது. இங்கு ஒரு கோடியே 36 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். லத்தீன் - அமெரிக்க நாடுகளில் பொருளாதார ரீதியாக மிக வேகமாக வளர்ந்து வரும் நாடான சிலியில் லஞ்சம், குற்றங்கள் குறைவு. அதே நேரத்தில் இங்கு பாலியல் தொழிலுக்கு தடை இல்லை. ஆண்டுதோறும் ஆதரவற்ற, ஏழை - எளிய, ஊனமுற்ற குழந்தைகளுக்கு சிலி நாட்டில் நிதி திரட்டும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சி உலகம் முழுவதன் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளது.

ஊனமுற்ற குழந்தைகளுக்காக திரட்டப்டும் இந்நிகழ்ச்சியில் அந்நாட்டைச் சேர்ந்த மரியா கரோலினா என்ற பாலியல் பெண் தொழிலாளி ஈடுபட்டுள்ள விதம்தான் உலகம் முழுவதின் பார்வையும் சிலியை நோக்கித் திருப்பியுள்ளது. நிதி திரட்டுவதற்காக மரியா கரோலினா இன்று இரவு முதல் தொடங்கும் 27 மணி நேர பாலியல் சேவையை பொது ஏலத்துக்கு விட்டுள்ளார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. 27 மணி நேரத்திற்கும் மரியா கரோலினா ஏலம் போய் உள்ளார். அதில் ஒரு வாடிக்கையாளர் அச்சேவைக்கு உரிய கட்டணத்தையும் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரியா கரோலினாவின் இந்த வித்தியாசமான அணுகுமுறை காரணமாக அந்நாட்டு பத்திரிக்கை - தொலைக்காட்சிகளில் எல்லாம் கரோலினா தான் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துள்ளார். தனது இச்சேவையின் மூலம் 4,000 டாலரை ஊனமுற்றோர் நிதிக்கு திரட்ட உள்ளதாக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கரோலினா தெரிவித்துள்ளார்.

தாங்கள் விரும்பியதை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று கூறிய நிதி திரட்டும் இயக்கத்தின் அமைப்பாளர் கிறிட்ஸ்பேர்ஜர், யாராவது தவறான முறையில் நிதி திரட்டுவதாக என்னிடம் புகார் தெரிவித்தால் அது போன்ற நடவடிக்கைகளை ஊக்கப் படுத்தமாட்டேன் என்று கூறியுள்ளார். இதனிடையே கரோலினா இணையதளம் மூலமாகவும் தனது சேவையை விரிவுப் படுத்தி தனது இலக்கான 4,000 டாலரை திரட்ட கரோலினா முயன்று வருகிறார்.

“நான் பணம் கொடுக்கும் முறையை குறை சொல்கிறார்கள், என்னைத் தவிர பிறர் கொடுக்கும் தொகை தான் பல்வேறு கேள்விகளுக்கு உட்பட்டதாக இருக்கும” என்று கூறினார்.

“அவர்களுக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம் ஒன்று தான் நான் எந்த முறையில் பணத்தை திரட்டி கொடுக்க போகிறேன் என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டேன” என்று மரியா கரோலினா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil