இரண்டாவது சர்வதேச ஆயுர்வேத மருத்துவ மாநாடு வருகிற ஜனவரி 20 ஆம் தேதி மலேசியாவில் நடக்கிறது.
இம்மாநாட்டினை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்த வனெளசாதி வித்யா பீடம், முக்தி ஆயுர்வாதா, யோகா நிறுவனம், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஜப்பான் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆயுர்வேதா ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.
நோய்களுக்கு நிவாரணம் காண பாதுகாப்பான உறுதியான ஒரே வழி ஆயுர்வேதம்தான் என்பது உலகம் முழுவதும் தெரியும். எனவே, இம்மருத்துவ முறையை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன் இம்மாநாடு நடத்தப்படுகிறது என்று மாநாட்டு அமைப்பாளர்கள் கூறினர்.
ஆயுர்வேத மாநாட்டில், பொதுவான உடல் நலம், சமூகத்தில் நோய்களுக்கான சிகிச்சை முறைகள், உடல்நலமும் மன நலமும், எச்.ஐ.வி. எய்ட்ஸ், யோகாவும் இயற்கை மருத்துவமும், மூலிகைகள், மூலிகை ஆராய்ச்சி, நரம்பியலும் உடல்நலமும் உள்பட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடக்கவுள்ளன.