Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'அமெரிக்க கருத்துடன் ஒத்துப்போக முடியாது': முஷாரஃப்!

'அமெரிக்க கருத்துடன் ஒத்துப்போக முடியாது': முஷாரஃப்!
, புதன், 14 நவம்பர் 2007 (15:42 IST)
பாகிஸ்தானில் பிரகடனம் செய்யப்பட்டுள்ள அவசர நிலை தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள கருத்துகளுடன் ஒத்துப்போக முடியாது என்று அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கூறியுள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில், அதிபர் பதவி பறிபோய்விடக் கூடாது என்பதற்காக அவரநிலையைக் கொண்டு வரவில்லை என்று முஷாரஃப் கூறியுள்ளார்.

''பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் இயல்பாக நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

பொதுத் தேர்தல் தடையில்லாமல் வெளிப்படையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் அயலுறவு அமைச்சர் காண்டலிசா ரைஸ் தெரிவித்துள்ள கருத்துகளை முற்றிலுமாக நான் நிராகரிக்கிறேன்.

அவசர நிலையை நான் ஏன் தாமதமாகக் கொண்டு வந்தேன் என்றுதான் பொதுமக்கள் கேட்கின்றனர். அவசர நிலையை அவர்கள் வெறுக்கவில்லை.

மனித உரிமை ஆர்வலர்களில் 90 விழுக்காட்டினர் வாக்களிக்கவே வருவதில்லை. தேர்தல் நாளன்று அனைவரும் வீடுகளில் தூங்குகின்றனர் என்பதுதான் உண்மை'' என்றார் முஷாரஃப்.

அதேநேரத்தில், விரைவில் ராணுவத் தளபதி பதவியை விட்டு விலகிடுவேன் என்றும், அவசர நிலை கைவிடப்பட்ட பின்புதான் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil