இலங்கை இனப்பிரச்சனைக்கு அமைதிப் பேச்சு மூலம் அரசியல் ரீதியானத் தீர்வுகாணவேண்டும் என்பதையே இந்தியா எப்போதும் வலியுறுத்தி வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சென்றிருந்த நிதியமைச்சர் சிதம்பரம் கொழும்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ''இலங்கை இனப் பிரச்சனைக்கு அமைதிப் பேச்சு மூலம் அரசியல் ரீதியான தீர்வுகாண வேண்டும் என்பதையே இந்தியா எப்போதும் வலியுறுத்தி வருகிறது. எடுத்துக்காட்டாக வட அயர்லாந்துப் பிரச்சனைககு அமைதி வழியின் மூலம் திர்வு காணப்பட்டுள்ளது'' என்றார்.
''ஒரு தரப்பினரின் அர்த்தமில்லாத பயங்கரவாத நடவடிக்கைகள், மற்றொரு தரப்பினரின் திட்டமிட்ட ராணுவ நடவடிக்கைகள் என்று தொடர்ந்தால் உயிரிழப்புதான் அதிகரிக்கும். மக்களின் நம்பிக்கை அடிப்படையில் அமைதி ஒப்பந்தத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெற்காசியாவில் சிறிலங்காதான் பாதுகாப்பிற்காக அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது. அதே நேரத்தில் கல்விக்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்கியுள்ளதும் சிறிலங்காதான்" என்றார் சிதம்பரம்.