அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருந்து மும்பைக்கு கத்திகளுடன் விமானத்தில் வர முயன்ற 2 இந்தியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அட்லாண்டா விமான நிலையத்தில் மும்பைக்கு புறப்பட இருந்த விமானத்தில் பயணத்திற்குக் காத்திருந்த பயணிகளிடம் வழக்கமான சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, சகன்பாய் (60) என்ற பயணிதன்னிடமிருந்த கார் பொம்மையில் 20க்கும் மேற்பட்ட கத்திகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதேபோல விமானத்தில் அமர்ந்திருந்த சக்கரபாய் பட்டேல்(64) என்ற பயணியிடம் கத்திகளும், 5,000 டாலர் பணமும் இருந்தன. இதையடுத்து இருவரும் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
''கைது செய்யப்பட்ட இந்தியர்கள் விமானத்தில் எந்தக் கலவரமும் செய்யத் திட்டமிடவில்லை. அவர்களின் மீது சாதாரணக் குற்றச்சாற்றுதான் சுமத்தப்பட்டுள்ளது. எனவே விசாரணைக்குப் பிறகு பெரிய நடவடிக்கைகள் எதுவும் இருக்காது'' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.