தானோ அல்லது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர்களோ தாக்கப்பட்டால், பெனாசீர் புட்டோ மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று பாகிஸ்தான் மதவிவகாரங்களுக்கான அமைச்சர் இசாஷ் உல்ஹக் எச்சரித்துள்ளார்.
கடந்த 18ஆம் தேதி கராச்சியில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்த உல்ஹக், பெனாசீர் தனது வருகையைத் தாமதப்படுத்தி இருந்தால் இந்த அசம்பாவிதம் நடைபெற்று இருக்காது என்று குறிப்பிட்டார்.
அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் அரசியல் விளையாட்டுகளை பெனாசீர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மதப்பள்ளிகள் எனப்படும் மதரசாக்கள் பற்றி விமர்சிக்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள், அவ்வாறு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.