இந்தியா - நார்வே இடையே இருதரப்பு பொருளாதார மேம்பாடு மற்றும் உறவு குறித்து அந்நாட்டு நிதியமைச்சருடன் இன்று ப. சிதம்பரம் பேச்சு நடத்துகின்றார்!
நார்வே நாட்டிற்கு 3 நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை இந்தியத் தூதர் மகேஷ் சச்சுதேவ் மற்றும் நிதித்துறை துணைப் பொதுச் செயலர் தோராவால்ட் ஆகியோர் நேற்று வரவேற்றனர்.
இரு நாடுகளுக்கிடையே பொருளாதார உறவை வலுப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு நிதியமைச்சர் கிறிஸ்டின் ஹால்வோர்சென் மற்றும் நார்வே சுற்றுச்சூழல் மற்றும் அயலுறவு மேம்பாட்டுத் துறை அமைச்சர் எரிக் சோல்ஹிம் ஆகியோருடன் நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேச்சு நடத்துகின்றார்.