சிறிலங்காவிற்கான நார்வே சிறப்புத் தூதர் ஜான் ஹன்சன் பெளயர் விரைவில் இந்தியா வரவுள்ளார்.
கடந்த 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறிலங்காவிற்கான சிறப்புத் தூதராக பெளயர் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் முதன்முதலாக இந்தியா வருகிறார்.
இங்கு வெளியுறவுஅமைச்சகத்தின் அதிகாரிகள், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார்.
இந்தச் சந்திப்பின்போது சிறிலங்காவில் அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பாகவும், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாகவும் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.