சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வருகிற 12ஆம் தேதி இந்தியா வருகிறார்.
அக்டோபர் 12 ஆம் தேதி புதுடில்லி வந்தடையும் மகிந்த ராஜபக்சே 13 ஆம் தேதி "இந்துஸ்தான் டைம்ஸ்" நாளிதழ் நடத்தும் கருத்தரங்கில் பேசுகிறார்.
அதன் பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரைச் சந்திக்கும் மகிந்த ராஜபக்சே, சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்குவார் என்று தெரிகிறது.
மேலும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரையும் மகிந்த சந்திக்கக்கூடும் என புதுடெல்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன.