அணு ஒப்பந்தம் தொடர்பாக யாரும் அச்சப்பட தேவையில்லை என்று சோனியா காந்தி கூறினார்.
அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நியூயார்க் நகரில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுகையில், அணு ஒப்பந்தம் போன்ற முக்கிய பிரச்சினைகளில் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவிப்பது வழக்கம்தான். இந்த கருத்து வேறுபாடுகள் களையப்படும் என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி ஆட்சி என்பது புதிய அனுபவம். அணு ஒப்பந்தம் தொடர்பாக யாரும் அச்சப்பட தேவையில்லை என்று சோனியா காந்தி கூறினார்.