சிறிலங்காவுக்கான நார்வேயின் புதிய தூதராக ரொறி ஹட்கீம் விரைவில் அதிகாரபூர்வமாக பதவியேற்க உள்ளார்.
பதவிக்காலம் முடிவடைந்து நார்வே திரும்பிய முன்னாள் தூதர் ஹன்ஸ் பிறட்ஸ்கரின் இடத்தில் ரொறி ஹட்கீம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு சென்றடைந்திருக்கும் ரொறி ஹட்கீம், அதிபர் மகிந்த ராஜபக்சா அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியதும், தனது நியமனப் பத்திரத்தை மகிந்தவிடம் சமர்ப்பித்து, அவர் முன்னிலையில் அதிகாரபூர்வமாக பதவியேற்க உள்ளதாக கொழும்பில் உள்ள நார்வே தூதரகம் தெரிவித்துள்ளது.
நார்வேயின் வெளி விவகார அமைச்சகத்தின் அரசியல் பிரிவுத் தலைவராகவும், ஆராய்ச்சியாளராகவும், உதவிச் செயலாளர் மற்றும் முதன்மைச் செயலாளராகவும் ரொறி ஹட்கீம் பதவி வகித்துள்ளார்.