பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ராவல்பிண்டியில் அடுத்தடுத்து நிகழ்ந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டனர்!
பாகிஸ்தான் அணுசக்தி ஆணையத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தைக் குறி வைத்து காசிம் பஜார் என்ற இடத்தில் முதல் தாக்குதல் நடந்ததாகவும், இதில் அந்த பேருந்தில் இருந்தவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டதாகவும், அடுத்த 15 நிமிடத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த ஆரிய பஜார் என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் மேலும் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவத்தின் துணைத் தளபதி வாஹித் அர்ஷாத் கூறியுள்ளார்.
இவ்விரு தாக்குதல்களிலும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் இது என்று அர்ஷாத் கூறியுள்ளார்.