ஈராக்கில் கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல்களில் 50 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த அரை இறுதி போட்டியில் தென்கொரியாவை வென்று ஈராக் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து, ஈராக் வெற்றி பெற்றதை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஈராக்கில் ரசிகர்கள் தெருக்களில் ஆடிபாடி ஊர்வலமாக சென்றனர். மண்லோர் என்ற இடத்தில் ஊர்வலமாக சென்ற ரசிகர்கள் கூட்டத்தில் மனித வெடிகுண்டு தீவிரவாதி காரில் வந்து குண்டை வெடிக்க செய்தான்.
இதில் 30 ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி உயிரிழந்தனர். அதேபோல், பாக்தாத் நகர ராணுவ சோதனை சாவடி அருகே கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் கார்குண்டு வெடித்தது. இதில் 20 பேர் பலியானார்கள். இரு சம்பவத்திலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.