யுத்தமென்றாலும், பேச்சுவார்த்தையென்றாலும் தாங்கள் தயாராக உள்ளோம் என்று சிறிலங்க அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார்!
சிறிலங்க அரசு நாளிதழான டெய்லி நியூஸ் பதிப்பிற்கு அளித்துள்ள நேர்காணலில், யுத்தமா? அல்லது பேச்சா? எந்தப் பாதை என்பதை விடுதலைப் புலிகள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
"யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டு பகுதி என்ற வரையறையை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டது. அத்தகைய துரோகத்தை நாங்கள் செய்ய மாட்டோம்" என்று கூறியுள்ள ராஜபக்சே, தொப்பிகல்ல வீழ்ச்சி ஒரு புதிய சகாப்தம் என்று கூறியுள்ளார்.