பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கட்சி அலுவலகம் அருகில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலியாகியுள்ளனர். 45 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபத்தில் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் அதிபர் முஷரப்பால் பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதி இப்திகார் சௌத்ரி உரையாற்றிக்கொண்டிருந்தார். இதன் அருகே பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது.
இதில் அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் இருப்பதாகவும், இது தற்கொலைப்படை தாக்குதல் என்றும் இஸ்லாமாபாத் காவல் துறை ஆணையர் காலித் பெர்வேஷ் தெரிவித்தார்.
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் பாகிஸ்தான் முனாள் பிரதமர் பெனாசிர் புட்டோவின் கட்சி அலுவலகம் இருப்பது குறிப்பிடதக்கது.