இங்கிலாந்தில் கார் குண்டு தாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதிகளுடன் தொடர்பிருப்பதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட இந்திய மருத்துவர் மொஹம்மது அனீஃப் பிணைய விடுதலைக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இன்று காலை பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனீஃப் சார்பில் பிணைய விடுதலை மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு மீதான விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தை தள்ளி வைத்த நீதிபதி, மாலை 3 மணிக்கு நீதிமன்றம் மீண்டும் கூடும் என்று அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த முயற்சி செய்த பயங்கரவாதிகள் சபீல் மற்றும் கஃபீல் அஹமதுவுடன் அனீஃப் தொடர்பு வைத்திருந்ததாக ஆஸ்ட்ரேலிய காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.