மனித வெடிகுண்டாகச் சென்று சிறிலங்க ராணுவத்தை தாக்கி அழித்து கதிகலங்க வைக்கும் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவான கரும்புலிகள் இன்று 20வது ஆண்டு தினத்தை கடைபிடித்தனர்!
20 ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நெல்லியாடிப்பள்ளியில் முகாமிட்டிருந்த சிறிலங்க ராணுவத்தினரை குண்டுகள் நிரம்பிய வாகனத்தை ஓட்டிச் சென்று தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்திய 'கேப்டன்' மில்லரின் தாக்குதலை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை விடுதலைப் புலிகள் கடைபிடித்து வருகின்றனர்.
மில்லர் நடத்திய அத்தாக்குதலில் சிறிலங்க ராணுவத்தினர் 40 பேர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு ஏராளமான தற்கொலைத் தாக்குதல்களை கரும்புலிகள் மேற்கொண்டனர். கடந்த ஜூன் 27 ஆம் தேதி வரை இப்படிப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 322 கரும்புலிகள் உயிரிழந்துள்ளதாக புதினம்.காம் இணையதளம் கூறியுள்ளது.
இவர்களில் 241 பேர் கடல் தாக்குதல்களிலும், 81 பேர் நிலத் தாக்குதல்களிலும் ஈடுபட்டு உயிர் துறந்ததாக அச்செய்தி கூறுகிறது. (யு.என்.ஐ.)