அரசிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்த செய்திகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 2 தனியார் தொலைக்காட்சிகளை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது!
ஜியோ தொலைக்காட்சி, ஆஜ் தொலைக்காட்சி ஆகியவற்றின் ஒளிபரப்புகளை கம்பிவட தொலைக்காட்சிகளின் மூலம் அளிக்கக்கூடாது என்று பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் அரசின் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம், கம்பிவட தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களுக்கு இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாக இஸ்லாமாபாத்தில் இருந்து வெளிவரும் டெய்லி டைம்ஸ் எனும நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால், இப்படிப்பட்ட உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை என்று பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் மொஹம்மது அலி துராணி கூறியுள்ளார். (ஏ.என்.ஐ.)