தமிழ்.வெப்துனியா : அந்த மாணவர்களுக்கு தமிழ் மொழியிலேயே பாடங்கள் சொல்லிக் கொடுப்பது பற்றி கூறுங்கள்?அவர்களால் தமிழ் மொழியில் மட்டுமே படிக்க முடியும். ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுத்தால் படிக்க முடியாமல் போய்விடும். எத்தனையோ ஆங்கிலப் பள்ளிகளைப் பார்க்கிறோம். அங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலமும் சரியாக தெரியாது, தமிழும் தெரியாது. குறைந்தபட்சம் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் நன்றாகத் தெரியும் என்று சந்தோஷப்படலாமே.தமிழ்.வெப்துனியா : உங்கள் பள்ளியில் கோசாலை அமைத்துள்ளது பற்றி கூறுங்கள்?
கோசாலை அமைத்ததன் நோக்கமும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்றுதான். பசு பால் கறக்கும் வரை அதை வைத்திருந்துவிட்டு, பால் நின்றதும் கசாப்புக் கடைக்கு அனுப்பிவிடுவார்கள். அதனை தடுத்து அவற்றை வாழ வைக்கிறோம். அவை சும்மா சாப்பிடுவதில்லை, பசுவின் சாணத்தை எரிவாயுவாகவும், உரமாகவும் மாற்றிக் கொள்கிறோம், பசுவின் கோமியத்தையும் கிருமி நாசினியாகப் பயன்படுத்திக் கொள்கிறோம்.
அதுபோலத்தான் முதியவர்களையும் அங்கு வைத்துள்ளோம். ஒவ்வொரு முதியவர்களுக்கும் 5 குழந்தைகளை ஒப்படைத்துவிடுகிறோம். இவர்கள்தான் உங்களது தாத்தா, பாட்டி என்றும், அவர்களுக்கு இந்த 5 மாணவர்களும்தான் பேரப்பிள்ளைகள் என்று கூறிவிடுவோம்.
முதியவர்களும், குழந்தைகளும் உறவுகள் இல்லாமல் வாடுகின்றனர். அவர்களுக்கு உறவுகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.
தமிழ்.வெப்துனியா : உங்களது இந்த சேவையில் சமூகத்திடம் இருந்து நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
இரண்டு விஷயம் இருக்கிறது. ஒன்று பணம். பணம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. எத்தனையோ பெரிய ஆட்களிடம் எங்களது சேவாலாயாவிற்கு வாருங்கள் என்று கூறினால் அவர்களால் வர முடியாது. ஆனால் நன்கொடை அளிப்பார்கள். அவர்களது தொழில் அப்படி. முடிந்தவர்கள் நன்கொடை அளிக்கலாம்.
அடுத்தது பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் வாரத்தில் ஒரு நாளோ அல்லது மாதத்தில் 2 நாட்களோ தங்களது நேரத்தை எங்கள் மாணவர்களுடன் செலவிட வேண்டும். நடனம் தெரிந்தவர்கள், பாடல் தெரிந்தவர்கள், குறிப்பாக கணக்கு ஆசிரியர்கள் எங்களது மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க தன்னார்வத்துடன் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
விளையாட்டு, இசைக் கருவிகள் வாசிக்கக் கற்றுக் கொடுத்து சேவையாற்றலாம்.
முன்பெல்லாம் பிறந்தநாள் என்றால் வீட்டிலோ அல்லது ஹோட்டலில் விருந்து வைப்பார்கள். இப்போதெல்லாம் அதுவும் கொஞ்சம் மாறி, சேவாலயாவிற்கு வந்து அவர்களுக்கு ஒரு நாள் உணவு வழங்கி அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். முன்னோர்களின் நினைவு நாளையும் இதுபோல் செய்கின்றனர். இதுவும் ஒரு நல்ல மாற்றம்தான்.
அப்படி பிறந்த நாள் விழாவிற்கு ஒரு நாள் உணவு வழங்க எவ்வளவு தொகை தேவைப்படும்?
ரூ.8,000. அங்குள்ள மாணவர்கள், முதியவர்கள், பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் காலை, மதியம், இரவு உணவளிக்க ரூ.8,000 ஆகும்.
சேவாலயாவிற்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு உண்டா?
100 சதவீத வருமான வரி விலக்கு உண்டு. 80ஜி என்று சொல்வார்கள். அது 50 விழுக்காடுதான். அதுவும் இருக்கிறது. சேவாலயாவின் சில சிறப்பு சேவைகளாக கல்வி செலவு, குழந்தைகள் இல்ல செலவு, பள்ளிக் கட்டிடம் கட்ட செலவு ஆகியவற்றுக்கு நன்கொடை அளித்தால் 35ஏசி பிரிவின் கீழ் 100 விழுக்காடு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
வையத் தலைமை கொள் என்ற லீடர்ஷிப் பற்றி நீங்கள் எழுதிய புத்தகம் பற்றி கூறுங்கள்?
கல்கி நிர்வாகி சீதா ரவியை, எங்கள் சேவாலயாவின் விழா ஒன்றுக்கு அழைத்திருந்தோம். அப்போது, அவர், இந்த சேவாலயாவின் அனுபவங்கள் பற்றி நீங்கள் கல்கியில் கட்டுரை எழுதுங்கள் என்று கூறினார்.
தலைமைப் பன்பு பற்றி காந்தி, பாரதி, விவேகானந்தர் கூறியதைத்தான் நான் கூற முடியும். அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். இந்த காலத்தில் கருத்தரங்கு வைத்துக் கூறுவதைத்தான் அந்த காலத்திலேயே அவர்கள் வாழ்ந்து காட்டிவிட்டார்கள். நானும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளேன். அதையும், இவர்கள் கூறியதையும் சேர்த்து 15 வாரம் கட்டுரை எழுதினேன். அதன்பிறகு அவர்களே இதனை தொகுத்து ஒரு புத்தகமாகவும் வெளியிட்டனர்.
தமிழ்,வெப்துனியா:மிக்க நன்றி.
தொடர்பு கொள்ள மேலும் விவரம் அறிய
சேவாலயா
கசுவா கிராமம்
பாக்கம் அஞ்சல் - 602 024
தொலைபேசி - 26344243, 64611488, 64611489, 94443 46699, 94446 20286, 94446 20289,