Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மன்மோகன் அமைச்சரவையில் 77% பேர் கோடீஸ்வரர்கள்!

மன்மோகன் அமைச்சரவையில் 77% பேர் கோடீஸ்வரர்கள்!
, வெள்ளி, 16 செப்டம்பர் 2011 (18:19 IST)
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர்களில் 77 விழுக்காட்டினர் கோடீஸ்வரர்கள் எனத் தெரியவந்துள்ளது.

பெட்ரோல், டீசல்,உணவு பொருட்களின் விலை உயர்வு மற்றும் பண வீக்கத்தினால் சாம்ன்ய மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில்தான், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (
PTI Photo
FILE
Association for Democratic Reforms - ADR) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

மேற்கூறிய கோடீஸ்வர அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு 10.3 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் 3 கோடி அதிகமாகும்.

இந்த கோடீஸ்வர அமைச்சர்கள் பட்டியலில் மத்திய கனரக தொழிற் துறை அமைச்சர் பிரபுல் படேல்தான் முதலிடத்தில் உள்ளார்.இவரது சொத்து மதிப்பு சுமார் 122 கோடி ரூபாய்.

இவருக்கு அடுத்தபடியாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.இவரது சொத்து மதிப்பு ரூ.70 கோடி ஆகும்.

அதனைத் தொடர்ந்து கமல்நாத் ரூ.41 கொடி சொத்துக்களை வைத்துள்ளார்.

இதில் ஜெகத்ரட்சகனின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 64.5 கோடியாக இருந்த நிலையில், தற்போது 70 கோடியாக அதிகரித்துள்ளது.

ஜெகத்ரட்சகனைத் தொடர்ந்து பிரபுல் படேலின் சொத்து மதிப்பு கடந்த இரண்டாண்டுகளில் 42 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.2009 ல் 79.8 கோடியாக இருந்த இவரது சொத்து மதிப்பு, 2011 ல் 122 கோடியாக அதிகரித்துள்ளது.

அதப்போன்று கமல்நாத்தின் சொத்து மதிப்பும் 26 கோடியிலிருந்து 41 கோடியாக அதிகரித்துள்ளது.

இதேப்போன்று மேலும் பல கேபினட் மற்றும் இணையமைச்சர்களின் சொத்து மதிப்பு, கடந்த இரண்டாண்டுகளில் 700, 800 மற்றும் 1,000 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil