Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா

Advertiesment
ஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா
ச‌ெ‌ன்னை , சனி, 21 மே 2011 (16:31 IST)
FILE
''திருமண உதவி கேட்கும் ஏழை‌ப் பெ‌ண்க‌ளு‌ம், இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்கு‌ள் இரு‌க்க வே‌ண்டு‌‌ம், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அ‌ப்படி இரு‌ந்தா‌ல் ம‌ட்டுமே ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்'' எ‌ன்று த‌மிழக அரசு பு‌திய ‌நிப‌ந்தனையை ‌வி‌தி‌த்து‌ள்‌ளது.

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌‌ல் வா‌க்குறு‌திபடி படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று பதவியேற்ற நாளிலே முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அவ‌ர் அ‌றி‌‌வி‌த்த கையோடு த‌மிழக சமூகநலம், சத்துணவுத் துறை முதன்மைச் செயலர் மோகன் பியாரே மூல‌ம் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள அரசாணை‌யி‌ல் இ‌ந்த பு‌திய ‌நிப‌ந்தனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த கால‌த்‌தி‌ல் பெ‌ண் ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் ச‌ெ‌ய்து வை‌க்க பெ‌ற்றோ‌ர்க‌ள் படு‌ம்பாடு சொ‌ல்‌லிமாளாது. அ‌ந்த அளவு‌க்கு த‌ங்க‌த்த‌ி‌ன் ‌விலை ஏழைக‌ள் வா‌ங்க முடியாத அளவு‌க்கு எ‌ட்டா நிலை‌க்குச் செ‌ன்று ‌வி‌ட்டது. அ‌ப்படி இ‌ப்படி எ‌ன்று ‌சிறுக ‌சிறுக நகைகளை சே‌ர்‌த்து வை‌க்‌கி‌ன்றன‌ர் பெ‌ண் ‌பி‌ள்ளைகளை பெ‌ற்றவ‌ர்க‌ள். ஒ‌ரு‌வ‌ழியாக நகைகளை சே‌ர்‌த்து த‌ங்க‌ள் ‌பெ‌ண் ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் செ‌ய்து வை‌க்க‌ி‌ன்றன‌ர். அ‌த்துட‌ன் த‌மிழக அரசு கொடு‌த்த 20,000 ரூபாயு‌ம் அவ‌ர்களு‌க்கு ஒரு கட‌ன் சுமையை குறை‌ப்பதாக இரு‌ந்தது.

த‌ற்போது அத‌ற்கு‌ம் இடி ‌விழு‌ந்த மா‌தி‌ரி வெ‌ட்டு வை‌த்து‌ள்ளது த‌மிழக அரசு. ‌திருமண‌ உத‌வி‌த் தொகை பெற வே‌ண்டுமானா‌ல் பெ‌ண்‌ணி‌ன் பெ‌ற்றோ‌‌ரி‌ன் ஆ‌ண்டு வருமான‌ம் 24,000 ரூபா‌ய்க்கு குறைவாக இருக்க வேண்டும் எ‌ன்று. ‌கிராம‌ப்புற‌த்‌தி‌ல் நெ‌ற்ப‌யிரு‌க்கு களை எடு‌‌க்கு‌ம் ஒரு பெ‌ண்‌ணி‌ன் ஒரு நா‌ள் கூ‌லி 100 முத‌ல் 130 வரை கொடு‌க்‌க‌ப்படு‌கிறது. ம‌ண்வெ‌ட்டியை எடு‌த்து வேலை‌க்கு செ‌‌ன்றா‌ல் 150 ரூப‌ா‌‌ய்‌க்கு குறை‌ந்து கூ‌லியை வா‌ங்காம‌ல் வருவ‌தி‌‌ல்லை ‌கிராமபுற ம‌க்க‌ள். இ‌ப்படி கூ‌லிவேல‌ை‌க்கு செ‌ன்று ச‌ம்பா‌தி‌க்கு‌ம் ஏழை‌ப்‌பெ‌ற்றோ‌ர்க‌ளி‌ன் ஆ‌ண்டு வரு‌ம் 35 ஆ‌யிர‌‌த்‌தி‌ற்கு மே‌ல் இரு‌க்கு‌ம் போது 24 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌திருமண உத‌வி‌ தர‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ள எ‌ந்த வகை‌யி‌ல் ‌நியாய‌ம்?

த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளதை பா‌ர்‌த்தா‌‌ல் ஏழைக‌ளி‌ன் ஒரு நா‌ள் ச‌ம்பள‌ம் ரூ.65.75 காசுதா‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம். இ‌ந்த ச‌ம்பள‌த்‌தி‌ற்கு வேலை பா‌ர்‌த்த கால‌ம் எ‌ப்போதோ மலையே‌றிவிட்டது.

மேலு‌‌ம் ‌திருமண உத‌வி‌த்தொகையை பெற பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்க‌ள் 5ஆம் வகுப்பு வரையு‌ம், ஆ‌தி‌திரா‌விட‌ர் வகு‌ப்பு உ‌ள்‌ளி‌ட்ட மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டுமா‌ம். த‌ற்போது ‌திருமண வய‌தை எ‌ட்டியு‌ள்ள ஏழை‌ப்பெ‌ண்க‌ளு‌க்கு எ‌ப்படி இ‌ந்த அ‌றி‌வி‌‌ப்பு சா‌த்‌தியமாகு‌ம். ‌மீ‌ண்டு‌ம் அவ‌ர்க‌ள் முத‌ல் வகு‌ப்‌பி‌ல் இரு‌ந்து படி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌க்‌கிறாரா முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா.

கிராம‌ப்புற‌ங்க‌ளி‌‌ல் ஒரு ‌வீ‌ட்டி‌ல் இரண‌்டு, மூ‌ன்று பெ‌ண் ‌பி‌ள்ளைக‌ள் இரு‌ந்த‌ா‌ல் இ‌தில‌் யாராவது ஒரு பெ‌ண் ‌பி‌ள்ளையை‌‌த்தா‌ன் படி‌‌க்க வை‌க்‌கிறா‌ர்க‌ள். ம‌ற்ற இர‌ண்டு ‌பி‌ள்ளைகளையு‌ம் த‌ங்களு‌ட‌ன் கூ‌லி வேலை‌க்கு அழை‌த்து செ‌ன்று ‌விடு‌கி‌ன்றன‌ர். அ‌ப்படி இரு‌க்கு‌ம்போது த‌மிழக அர‌சி‌ன் இ‌ந்த அ‌றி‌வி‌ப்பு உதவியா? ஏமாற்றலா?

மேலு‌ம் ஒரு இடியை ஏழை ‌ம‌க்களு‌க்கு தூ‌க்‌கி‌ப் போ‌ட்டு‌ள்ளா‌ர் ஜெயல‌லிதா. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மட்டுமே திருமண நிதியுதவியும், தாலிக்கு தங்கமும் வழங்கப்படும் எ‌ன்று‌ம் அ‌றி‌‌வி‌த்து‌ள்ளது த‌மிழக அரசு! கட‌ந்த ‌தி.மு.க. ஆ‌ட்‌‌சி‌யி‌ல் ஒரு ஏழை‌க் கு‌டு‌ம்ப‌‌த்‌தி‌ல் எ‌த்தனை பெ‌ண் குழ‌ந்தைக‌ள் இரு‌ந்தாலு‌ம் அவ‌ர்களு‌க்கு ‌அர‌சி‌‌ன் ‌திருமண உத‌வி‌த்தொகை வழ‌ங்க‌ப்ப‌ட்டது. த‌ற்போது அத‌ற்கு‌ம் வே‌ட்‌டு வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், ஏழை விதவைகளின் மகள்கள் திருமண உதவித்திட்டம், அனாதை பெண்கள் திருமண உதவித் திட்டம், தமிழ்நாடு அரசு கலப்பு திருமண உதவித்திட்டம், விதவை மறுமண ஊக்குவிப்பு திட்டம் உள்ளிட்ட 10 வகையான திருமண உதவித்திட்டங்க‌ள் த‌மிழக‌த்‌தி‌ல் இரு‌க்‌கி‌ன்றன.

webdunia
FILE
இ‌ந்தத் திட்டங்களையெல்லாம் ‌தி.மு.க. அரசு ‌நிறைவே‌ற்‌றி வ‌ந்தது. ஏழை‌‌ப் பெ‌ண்க‌ளி‌ன் ‌திருமண உத‌வி‌த்தொகையாக 20 ரூபா‌ய் வழ‌ங்‌கியது. அதும‌ட்டு‌மி‌ன்‌றி ‌திருமண உத‌வி‌த்தொகை பெ‌ற்ற அதே பெ‌ண்ம‌‌‌‌ணி‌யி‌ன் க‌ர்‌‌ப்பகால‌ங்க‌ளி‌‌ல் மாத‌ாமாத‌ம் 700 ரூபா‌ய் வழ‌ங்‌கியது. குழ‌ந்தை ‌பிற‌ந்த உட‌ன் 6 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் வ‌ழ‌ங்‌கியது. ஏழை‌ப் பெ‌‌ண்களு‌க்கு இ‌ப்படி எ‌ன்ன‌ற்ற சலுகைகளை வழ‌ங்‌கியது கட‌ந்த ஆ‌ட்‌சி. இ‌ந்த ஆ‌ட்‌சி ஏழை‌ப் பெ‌ண்‌களு‌க்கு வழ‌ங்க‌ப்படு‌ம் சலுகைகளை நேரடியாக பறிக்காமல் நிபந்தனை விதித்து தடுக்கிறது. இலவசம் கொடுப்பதும், கொடுக்காததும் ஆளும் அரசின் வசதி. ஆனால், கொடுக்கிறேன் என்று கூறி அதற்கு நிபந்தனை விதிப்பது ஏழைகள் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும்.

த‌மிழக அரசு அ‌றி‌வி‌‌த்து‌ள்ள ‌இ‌ந்த ‌நிப‌ந்தனைக‌ள் மூல‌ம் ஏழை‌ப் பெ‌ண்க‌ளு‌க்கு ‌திருமண உத‌வி‌த்தொகை ‌கிடை‌க்க‌ப் போவ‌தி‌ல்லை எ‌ன்பது உறு‌‌தியா‌கி‌வி‌ட்டது. மொ‌த்த‌த்‌தி‌ல் திருமண உதவித்திட்ட‌த்து‌க்கு ஜெயல‌லிதா தலைமை‌யிலான த‌மிழக அரசு மூ‌டு‌விழா நடத்தப்போ‌கிறது.

தனது ‌பெ‌ண் பி‌ள்ளை‌யி‌ன் ‌திருமண‌த்‌தி‌ற்கு 25 ஆ‌யிர‌ம் ரூபாயு‌ம், 4 ‌கிராம‌ம் த‌ங்கமு‌ம் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌த்த‌ி‌ல் அ.இ.அ.‌தி.மு.க.வு‌க்கு வா‌க்க‌ளி‌த்த ஏழை வா‌க்காள‌ர்களு‌க்கு ஆ‌ட்‌சி அமை‌த்த ஐ‌ந்தே நா‌ளி‌ல் முத‌‌ல் ‌அ‌ல்வாவை கொடு‌த்து‌ள்ளா‌ர் ஜெயல‌லிதா. இது தவிர இன்னும் என்னென்ன திட்டங்களை கைவசம் வைத்துள்ளாரோ!

போகப் போகத் தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்.

Share this Story:

Follow Webdunia tamil