இன்று காலை வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான 1 டாலரின் மதிப்பு 10 பைசா சரிந்தது.
இன்று காலையில் வர்த்தகம் ஆரம்பித்த போது 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.42.85/42.86 ஆக இருந்தது. நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.42.95/42.96.
கடந்த இரண்டு நாட்களாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வந்தது. இன்று ரூபாயின் மதிப்பு அதிகரித்தது. பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரை வாங்குவது குறைந்ததால், டாலரின் மதிப்பு குறைந்து ரூபாயின் மதிப்பு அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
உலக சந்தையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இன்று ஆசியாவுக்கான கச்சா எண்ணெய் விலை 1 பீப்பாய் 129 டாலராக குறைந்தது.
இதுவரை இல்லாத வகையில் கடந்த வாரம் 1 பீப்பாய் 135 டாலராக உயர்ந்தது நினைவிருக்கலாம்.
அந்நியச் செலாவணி சந்தையில் நேற்று இறுதியில், பிரிட்டனின் பவுண்டுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.0.41, யூரோவுக்கு நிகரான மதிப்பு 0.35 பைசா, டாலருக்கு நிகரான மதிப்பு 0.24 பைசா குறைந்தது.