அந்நியச் செலாவணிச் சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 பைசா குறைந்து ரூ.42.72 / 73 ஆனது. இன்று காலை மேலும் 14 பைசா குறைந்து ரூ.42.86 / 87 ஆக சரிந்தது.
எண்ணெய் நிறுவனங்கள் தங்களது இறக்குமதிக்கான பணப்பட்டுவாடா செய்ய அமெரிக்க டாலர்களை வாங்கி வருவதால் டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது.