வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 3 பைசா அதிகரித்து.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.39.64/39.66 ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 3 பைசா அதிகம். நேற்றைய இறுதி நிலவரம் ரூ.39.61/39.62.
பங்குச் சந்தையில் அதிக சரிவு ஏற்பட்டதால், டாலரின் மதிப்பு அதிகரித்தது. ஏற்றுமதியாளர்கள் டாலரை விற்பனை செய்வதால் அதிக அளவு ரூபாயின் மதிப்பு குறையவில்லை என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.