Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உருக்கு விலை உயர்வு நியாயமானதல்ல-பஸ்வான்!

உருக்கு விலை உயர்வு நியாயமானதல்ல-பஸ்வான்!
, செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:19 IST)
உருக்கு ஆலைகள் உருக்கு, இரும்பு விலைகளை அதிகரித்து இருப்பது நியாயமானதல்ல என்று மத்திய உருக்குத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

உருக்கு ஆலைகள் சென்ற வாரத்தில் எல்லா வகையான உருக்கு,. இரும்பு பொருட்களின் விலையையும் டன்னுக்கு ரூ.2,500 வரை உயர்ததுவதாக அறிவித்துள்ளன. உருக்காலைக்கு தேவைப்படும் மூலப் பொருட்களின் விலை உயர்வு, சீனா, பிரேசில் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் உருக்கு பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் விலை சர்வதேச சந்தையிலும் அதிகரித்து உள்ளதால், உள்நாட்டு உருக்கு ஆலைகளும் விலையை அதிகரித்தன.

டெல்லியில் நேற்று இந்திய உருக்கு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

உருக்கு அமைச்சகத்தின் விலை கண்காணிப்பு குழுவை, உள்நாட்டு உருக்கு ஆலைகளின் சமீபத்திய விலை உயர்வு பற்றி ஆராய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் அறிக்கை அடுத்த சில நாட்களில் தயாராகிவிடும்.

இந்த அறிக்கை தயாரானவுடன், உள்நாட்டு பொதத்துறை மற்றும் தனியார் ஆலைகளுடன் சமீபத்திய விலை உயர்வு நியாயமானதா என்பது குறித்து ஆலோசிக்கப்படும். இந்த கூட்டம் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு முன்பாக கூட்டப்படும்.

அரசு உருக்கு ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதை விரும்பவில்லை. அதே நேரத்தில் மூலப் பொருட்களின் விலை அதிகரித்து விட்டது என கூறி விலை உயத்துவதையும் விரும்பவில்லை. எனவே நான் உருக்கு ஆலைகளின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து, விலை உயர்வு நியாயமானதா அல்லது அநியாயமானதா என ஆய்வு செய்ய இருக்கின்றேன் என்று கூறினார்.

உருக்கு பொருட்களின் விலை உயர்வு சரியானதே என்று இந்திய உருக்கு ஆணையத்தின் சேர்மன் எஸ்.கே.ரூங்டா கூறினார்.

அவர் மேலும் கூறிகையில், கடந்த காலத்தில் மூலப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களில் விலை அதிகரித்து விட்டது. ஊழியர்களின் சம்பளமும் அதிகரித்து விட்டது. அரசு விலை உயர்வு பற்றி ஆய்வு செய்ய கூட்டும் கூட்டத்தில், நாங்கள் விலை உயர்வுக்கான காரணங்களை பற்றி விளக்குவோம் என்று கூறினார்.

உருக்கு மற்றும் இரும்பு தகடு உருளை கம்பி போன்ற பொருட்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு மூலப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. சைக்கிள் முதல் லாரி வரை வாகன உற்பத்தி துறை, பல்வேறு இயந்திரங்கள் உற்பத்தி, கட்டுமானத்துறைக்கு அத்தியாவசிய மூலப் பொருளாக உள்ளது. இதன் விலை உ.யர்வு, மற்ற எல்லா பொருட்களின் விலை உயர காரணமாக இருக்கும். இதனால் அதிக அளவு வேலை வாய்ப்பு அளிக்கும் சிறு, குறுந் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil