வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 15 பைசா குறைந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.39.70/39.72ஆக இருந்தது. இது நேற்றைய இறுதி விலையை விட 15 பைசா குறைவு. நேற்றைய இறுதி விலை ரூ.39.55/39.56
பங்குச் சந்தையி்ல் தொடர்ந்து பங்குகளி்ன் விலை அதிகரித்து வருவதும், அந்நியச் செலாவணி சந்தைகளில் இருந்து வரும் தகவல்களால், இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்கின்றனர். அந்நியச் செலாவணி சந்தையில் அதிகளவு டாலர் விற்பனைக்கு வருகின்றது. இதுவே டாலரின் மதிப்பு உயர்வதற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.