Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெங்களூரு‌வில் புதிய மலர் ஏல மையம்!

பெங்களூரு‌வில் புதிய மலர் ஏல மையம்!

Webdunia

, புதன், 5 டிசம்பர் 2007 (17:53 IST)
பெங்களூரு நகரத்தில் புதிதாக அலங்கார மலர்கள் ஏலம் விடுவதற்கான மையம் அமைக்கப்பட உள்ளது.

கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதிகளில் அதிகளவு அலங்கார பூக்கள் வளர்ப்பு தோட்டங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் அலங்கார பூக்கள் பெருமளவு அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இங்கு புதிதாக அலங்கார மலர்கள் ஏற்றுமதி மையம் அமைக்கப்பட உள்ளது. இதனை பெங்களூரு இன்டர்நேஷனல் ஃப்ளவர் ஆக்சன் நிறுவன‌ம் அமைக்‌கிறது. இ‌த்தகவலை இதன் சேர்மனும், கர்நாடக மாநில கூடுதல் தலைமைச் செயலாளருமான சுதாகர் ராவ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த நிறுவனம் மாநில அரசு மற்றும் அலங்கார மலர் உற்பத்தியாளர்கள் இணைந்து ஏற்படுத்திய கூட்டு நிறுவனமாகும்.
இந்த ஏல மையம் ரூ.10 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இது சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அமைக்கப்படுகிறது. இது இந்தியாவில் சர்வதேச அளவிலான மூன்றாவது அலங்கார மலர்களை ஏலம் விடும் மையமாக திகழும்.

ஏற்கனவே மும்பை, நோடியா ஆகிய இரு நகரங்களில் ஏற்றுமதி மையங்கள் உள்ளன.

இந்த மாநிலத்தில் கிடைக்கும் அலங்கார மலர் வாய்ப்பை பயன்படுத்தி, மாநிலத்தில் அலங்கார மலர் ஏல மையத்தை நடத்த திட்டமிட்டது. இதற்காக தென் இந்திய அலங்கார மலர் உற்பத்தியாளர் சங்கத்துடன் கூட்டு சேர்ந்து 2002 ஆம் ஆண்டில் அலங்கார மலர் ஏல மையத்தை அமைத்தது.

இங்கு ஏலம் விடப்படும் அலங்கார மலர்கள் சிங்கப்பூர் போன்ற நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளின் வர்த்தகர்கள் வாங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம். அத்துடன் இங்கிருந்து நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் அலங்கார மலர்கள் அனுப்ப முயற்சி செய்யப்படும். சர்வதேச அளவில் எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

சர்வதேச அளவில் அலங்கார மலர் வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு இந்த மலர்களை வளர்ப்தற்காகு ஏற்ற தட்ப வெ‌ப்ப நிலை நிலவுகிறது.
இதனால் பெங்களூரு‌வில் அமையவுள்ள அலங்கார மலர் ஏல மையம் சர்வதேச அளவில் இந்த வர்த்தகத்தில் முக்கிய இடம் பெறும். இங்கிருந்து தரமான அலங்கார மலர்கள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுடன் நாட்டின் இதர பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்படும்.

கர்நாடக மாநிலம் அலங்கார மலர்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது. இங்கு 20 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பல்வேறு ரக அலங்கார மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே பராம்பரிய மலர் வளர்ப்பில், நவீன முறைகள் புகுத்தப்பட்டு பசுமை குடில்களில் டச்சு ரோஜா, கார்னேஷன், கிராபாரா, ஆந்திரியம் போன்ற ரகத்தை சேர்ந்த மலர்கள் வளர்க்கப்படுகின்றன. பெங்களூரு‌விலும், அதன் புறநகர் பகுதிகளிலும் நிலவும் தட்ப வெ‌ப்ப நிலை பசுமை குடில்களை அமைத்து ஏற்றுமதி செய்வதற்கான மலர்களை வளர்ப்பதற்கு ஏற்றதாக இருக்கின்றது. இதனால் இந்த பகுதி அலங்கார மலர் ஏற்றுமதிக்கு முக்கிய பகுதியாக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil