Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈரானுக்கு அரிசி ஏற்றுமதி வாய்ப்பு

ஈரானுக்கு அரிசி ஏற்றுமதி வாய்ப்பு
, புதன், 5 டிசம்பர் 2007 (13:09 IST)
ஈரானுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இந்தியாவுக்கு அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் பாசுமதி உட்பட சன்னரக அரிசியை ஏற்றுமதி செய்வதில் இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் விளங்குகிறது.
சமீப காலங்களில் ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதி பெருமளவு குறைந்து விட்டது. இதற்கு அரசியல், தீவிரவாதம் உட்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

இந்நிலையில் எந்த சூழ்நிலையிலும் பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி செய்து வந்த ஈரானும், தற்போது இந்தியாவில் இருந்து அதிக அளவு அரிசி இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்ட துவகங்கியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒரே விவசாய விளை பொருள் அரிசி மட்டும் தான். தற்போது அதன் ஏற்றுமதி வாய்ப்பை பாகிஸ்தான் இந்தியாவிடம் இழந்து வருகிறது. இதற்கு காரணம் பாகிஸ்தானின் அயலுறவு கொள்கை, வர்த்தக அமைச்சகத்தின் செயலின்மை, ஏற்றுமதி தொடர்பானவர்களிடம் சரியான ஒருங்கினைப்பு இல்லாமல் இருப்பதே.

பாகிஸ்தானில் இருந்து சாலை வழியாக அரிசியை வெளிநாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு போக்குவர‌த்து செலவு அதிகரிக்கின்றது. அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து கப்பல் மூலமாக ஏற்றுமதி செய்வதற்கு குறைந்த செலவே ஆகும். அத்துடன் சமீபத்தில் ஈரான் அரசு சட்ட விரோதமாக இறக்குமதி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது போன்ற காரணங்களினால் பாகிஸ்தான் ஈரானுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக் கொண்டு, ஈரானுக்கு அதிகளவு அரிசி ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது. இதை இந்திய ஏற்றுமதியாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வரை ஈரானின் அரிசி இறக்குமதியாளர் பட்டியலில் இந்தியாவில் பெயர் இல்லை. ஆனால் கடந்த வருடம் (2006-07) இந்தியாவில் இருந்து 60 ஆயிரம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 2 லட்சத்து 25 ஆயிரம் டன்னாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த வருடம் ஏற்கனவே (2007-08) 1 லட்சத்து 50 ஆயிரம் டன் அரிசி ஏற்றுமதியாகி உள்ளது. இது 3 லட்சம் டன்னாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியாளர்கள் கருத்து தெரிவிக்கையில்,ஈரான் அரசு பாகிஸ்தான் ஏற்றுமதியை தடை செய்வதே, சட்ட விரோதமான அரிசி இறக்குமதியை ஊக்குவிக்கும் தந்திரமே என்று கூறுகின்றனர்.

பாகிஸ்தானின் குவாட்டா நகரத்தில் இருந்து ஈரானுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் ஹாஜி போஜன் கூறுகையில், ஈரானின் மீது போர் மேகங்கள் சூழந்துள்ளன. இதனால் ஈரான் முடிந்த அளவு உணவு தானியங்களை சேமித்து வைத்துக் கொள்வதாக தெரிகிறது என்று கூறினார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யும் முன்னணி ஏற்றுமதியாளர் ஜகீத் கவாஜா கூறுகையில், சர்வதேச சந்தையில் இருந்து பாகிஸ்தான் அரிசியை முழுவதுமாக நீக்கி விட்டு, அதற்கு பதிலாக இந்திய அரிசியை இடம் பெற செய்யும் தந்திரம் பாகிஸ்தான் அரசுக்கு நன்றாக தெரியும். இதனை தடுத்து நிறுத்த பாகிஸ்தான் அரசு எவ்வித முயற்சியையும் செய்யாது ஆச்சரியமாக இருக்கின்றது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil