வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு 7 பைசா சரிந்தது. இன்று மாலை இறுதி நிலவரப்படி 1 டாலரி்ன் மதிப்பு ரூ.39.42/39.43 ஆக முடிந்தது (நேற்றைய இறுதி நிலவரம் ரூ.39.49/39.50).
ரிசரவ் வங்கி டாலரின் மதிப்பு ரூ.39.43 என நிர்ணயித்தது. இது நேற்று நிர்ணயித்ததை விட 13 பைசா குறைவு. நேற்று 1 டாலர் ரூ.39.53 பைசா என நிர்ணயித்திருந்தது.
இன்று மற்ற அந்நிய நாணயங்களுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு.
1 யூரோ ரூ.57.93/57.94 (நேற்று 57.76/77)
1 பவுன்ட் ரூ.81.15/81.16 (81.37.38)
100 யென் ரூ.35.87/35.88 (35.70/71)