வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது 1 டாலர் ரூ.39.61/39.62 என்ற அளவில் விற்பனையானது. (வெள்ளிக் கிழமை இறுதி விலை ரூ. 39.62/ 39.63).
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையிலும், நிதிச் சந்தையிலும் அதிகளவு முதலீடு செய்யவில்லை. டாலர் வரத்து ஒரே மாதிரியாக இருந்தது.
இதனால் இந்திய ரூபாயின் மதிப்பில் அதிகளவு மாற்றம் இல்லை என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.