சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 99 டாலராக உயர்ந்துள்ளது.
அமெரிக்க லைட் சுவிட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 99.29 டாலராகவும், லண்டன் பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 50 செண்ட் அதிகரித்து 95.99 டாலராக உயர்ந்துள்ளது.
ஒபெக் மாநாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியை தற்போதைக்கு அதிகரிப்பது இல்லை என முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாளாகவே கச்சா எண்ணெய் விலை அதிகரித்த வந்த நிலையில், அமெரிக்க கையிருப்பு விவரம் வெளியானதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை இந்த அளவிற்கு உயர காரமாணது.