ஹவுசிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஹெச்.டி.எப்.சி) ரூ.10 முகமதிப்புள்ள் 3,96,841 பங்குகளை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இவை தலா 1 லட்சம் டாலர் மதிப்புள்ள 127 அந்நிய செலவாணி மாற்று பத்திரங்களுக்கு இணையாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பங்கு ஒதுக்கீட்டிற்கு பிறகு ஹெச்.டி.எப்.சி யின் செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.2,78,67,29,360 ஆக இருக்கும். (ரூ 10 முகமதிப்புடைய 27,86,72,936 பங்குகள்)