வளைகுடா முதலீட்டாளர்கள் இந்தியாவில் எரிசக்தி நகரத்தை உருவாக்க 630 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீட்டை திரட்டியுள்ளார்.
இந்தியாவில் எரிசக்தி நகரை உருவாக்கும் திட்டத்திற்காக 6.30 மில்லியன் அமெரிக்க டாலரை திரட்டியுள்ளதன் மூலம் இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்த எங்களது வாடிக்கையாளர்களின் நம்பிக்கை தெரியும் அதே வேளையில் எங்களது நிறுவனத்தின் கத்தார் எரிசக்தி நகர் திட்டம் வெற்றி பெற்றுள்ளதையும் எடுத்தக் காட்டுவதாக உள்ளது என்று ஜி.எப்.எச். குழுமுத்தின் தலைவர் எங்சம் ஜானகி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகளில் உள்ள பல்வேறு முன்னணி முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வாய்ப்புக்காக காத்திருந்ததாகவும் தாராளமய மாக்கல் கொள்கை நடைமுறைப்படுத்த தொடங்கியது முதல், முதலீடு செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த எரிசக்திம நகருக்கான மொத்த திட்ட மதிப்பீடு 2 பில்லியன் அமெரிக்க டாலராகும்.