Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏசியன் பெயின்ட் நிகர இலாபம் ரூ.108 கோடி!

ஏசியன் பெயின்ட் நிகர இலாபம் ரூ.108 கோடி!

Webdunia

, வெள்ளி, 19 அக்டோபர் 2007 (18:30 IST)
இந்தியாவின் முன்னணி பெயின்ட் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஏசியன் பெயிண்ட் நிகர இலாபமாக ரூ.108.44 கோடி அறிவித்துள்ளது.

இந்த நிதியாண்டில் இரண்டாவது காலாண்டின் ( ஜூலை முதல் செப்டம்பர் வரை) முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த மூன்று மாதங்களில் இதன் நிகர லாபம் ரூ.108.44 கோடியாக உள்ளது. இது சென்ற நிதியாண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 39.81 விழுக்காடு உயர்வு. சென்ற வருடம் நிகர இலாபமாக ரூ.77.56 கோடி இருந்தது.

இதன் மொத்த வருவாய் ரூ.916.91 கோடியாக உள்ளது. இது சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் 15.34 விழுக்காடு அதிகம். சென்ற வருடம் மொத்த வருவாய் ரூ.794.95 கோடியாக இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil