மும்பை பங்குச் சந்தையில், அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காண்பித்தனர்.
இதனால் காலையிலேயே பங்குகளின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. காலையில் 11.30 மணிக்குள் 162 புள்ளிகள் அதிகரித்தது.
காலையில் 11.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 17,313.48 என்ற அளவை தொட்டது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட, 162.90 புள்ளிகள் உயர்வு.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டான நிஃப்டியும் 42.50 புள்ளிகள் அதிகரித்தது. நிஃப்டி 5043.05 என்ற அளவை தொட்டது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 42.50 புள்ளிகள் உயர்வு.
இன்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டாடா ஸ்டீல், லார்சன் அண்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்ததால், குறியீட்டு எண் உயர்ந்தது.
இதே போல் நடுத்தர நிறுவன பங்குகளின் குறியீட்டு எண் மிட் கேப் 52.41 புள்ளிகளும், சிறிய நிறுவன பங்குகளின் குறியீட்டு எண் சுமால் கேப் 52.50 புள்ளிகளும் அதிகரித்தது.