Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை குறியீடு 17,000-ஐ தாண்டியது!

பங்குச் சந்தை குறியீடு 17,000-ஐ தாண்டியது!

Webdunia

, புதன், 26 செப்டம்பர் 2007 (12:59 IST)
மும்பபங்குசசந்தை குறியீட்டு எண் இன்று காலை வர்த்தகத்தில் 17,000 புள்ளிகளைத் தாண்டியது.

நேற்று ( 25-09-06 ) காலையில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்ததால், குறியீட்டு எண் 17,000-தாண்டிவிடும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிறகு மந்த நிலை நிலவியதால் 17,000-தொடவில்லை.

நேற்றைய எதிர்பார்ப்பு, இன்று நிறைவேறியது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை சென்ற வாரம் குறைத்தது. அத்துடன் அமெரிக்காவில் சப் பிரைம் எனப்படும் மறு கடன் சந்தையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீட்டு நிறுவனங்கள், ஆசிய சந்தைகளில் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்தியாவில் பணவீக்க விகிதம் குறைந்தது என அரசு அறிவித்த தகவல் மற்றும் இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசை ஆதிரிக்கும் இடது சாரி கட்சிகளுக்கும், அரசுக்கும் இடையே நிலவி வந்த பதட்டமான சூழ்நிலை மாறியுள்ளது. இதனால் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது.

இது போன்ற காரணங்களினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். சென்ற வாரத்தில் இருந்து வெளிநாட்டு மூதலீட்டு நிறுவனங்கள், பங்குகளை வாங்குவது அதிகரித்துள்ளது.

இன்று காலை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் துவக்கிய, சில நிமிடங்களிலேயே 17 ஆயிரம் புள்ளியை தொட்டது. (நேற்றைய இறுதி குறியீட்டு எண் 16969.45 புள்ளிகள்) பங்குகளின் விலை ஏறுமுகமாக இருந்ததால், 9 மணி 56 நிமிடங்களில் குறியீட்டு எண் 17 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி, 17,013 புள்ளியைத் தொட்டது.

அதற்குப்பின் பங்குகளின் விலைகள் சிறிது குறையத் துவங்கியது. 11 மணியளவில் 16,950 புள்ளியாக குறைந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தை எண் (நிப்டி) 5,000 புள்ளிகளை தாண்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் காலை நிலவரப்படி நிப்டி 4917.05 என்ற அளவில் இருக்கின்றது (நேற்றைய இறுதி நிலவரம் 4937.60 புள்ளிகள் )

இன்று குறியீட்டு எண் 17,000 ஆக உயர்ந்ததற்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகளின் விலைகளின் விலை உயர்வும், சத்யம் கம்ப்யூட்டர்ஸ், டாடா ஸ்டீல், விப்ரோ, ஹெச்.ி.எப்.ி, இன்போசியஸ், ஐ.ி.ஐ.ி.ஐ வங்கி, ஹூண்டால்கோ, சிப்லா, பர்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வுதான்.

கடந்த இரண்டு, மூன்று தினங்களாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் இறங்கு முகமாக இருந்தன. இன்று இந்த நிலை மாறி, இந்த பிரிவு பங்குகளின் விலை அதிகரிக்கும் போக்கு காணப்பட்டது.

பங்குச் சந்தை குறியீட்டு எண் செப்டம்பர் 19-ம் தேதி 16,000 தாண்டியது நினைவில் கொள்ளத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil