ஆசிய பங்குச் சந்தைகளில் பங்குகள் விற்பனை அதிகரித்ததன் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளிலும் ஏற்பட்ட தாக்கத்தினால் இன்று மதியம் வரையிலான வணிகத்தில் மட்டும் மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 578 புள்ளிகள் சரிந்துள்ளது!
நேற்றைய வர்த்தகத்தில் சற்றேறக்குறைய 650 புள்ளிகள் குறைந்த மும்பை பங்குச் சந்தைக் குறியீடு இன்றும் ஏற்பட்ட சரிவினால் கடந்த 3 மாதங்களில் நிகழாத அளவிற்கு 13,780 புள்ளிகள் அளவிற்கு சரிந்துள்ளது.
தேச பங்குச் சந்தை 176 புள்ளிகள் குறைந்து 4,002 புள்ளிகளாக குறைந்துள்ளது.
அதன்பிறகு, சாதாரண பங்குகளின் விற்பனை அதிகரித்ததால் மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 13,900 புள்ளிகளுக்கும், தேச பங்குச் சந்தைக் குறியீடு 4,040 புள்ளிகளுக்கும் உயர்ந்தன.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலோக நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்தன.
ஆசிய பங்குச் சந்தைகளில் இன்று மட்டும் 1.6 முதல் 5.9 விழுக்காடு வரை சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.