இந்தியா முழுவதும் 20 இடங்களில் உயர்தர தொழில் தீர்வு மையத்தை அமைக்க ஹெச்.பி. நிறுவனம் முடிவு செய்துள்ளது.
முன்னணி மென் பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹெச்.பி. இந்தியாவில் முதல் முறையாக உயர் தர தொழில் நுட்பத்துடன் கூடிய தொழில் தீர்வு மையத்தை இன்று சென்னையில் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.பி. நிறுவனத்தின் இயக்குனர் சமீர் மதூர், புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த தொழில் தீர்வு மையம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.
சென்னையில் தொடங்கப்பட்டுள்ளதைப் போல இன்னும் ஆறு மாத காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநகரங்கள், இரண்டாம் நிலை நகரங்களில் ஹெச்.பி. தொழில் தீர்வு மையத்தை விரிவு படுத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு மையமும் ரூ.20 செலவில் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் சென்னையில் உள்ள தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொழில் வளர்ச்சி அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வித ஆலோசனைகளும் தங்களது ஹெச்.பி. தொழில் தீர்வு மையத்தில் வழங்கப்படும் என்றார்.